ஏரி உடைந்து பெங்களூரில் வெள்ளம்: 300 வீடுகள் தண்ணீரில் மிதக்கிறது, வீடியோ உள்ளே

பெங்களூரில் மழைக் காரணமாக ஏரிகள் நிரம்பியிருந்த நிலையில், ஹுலிமாவு ஏரியில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்கு நீர் புகுந்தது...


பெங்களூரில் சமீப நாட்களாகப் பெய்து வரும் கனமழைக் காரணமாக, மாவட்டத்தைச் சுற்றி இருக்கும் ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஹுலிமாவூ ஏரி உடைந்ததில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் முழ்கியது.


பெங்களூரில் ஹூலிமாவூ பகுதியில் ஹுலிமாவூ ஏரி உள்ளது. சமீப நாட்களாகப் பெய்த மழையால் ஹுலிமாவ் ஏரி நிரம்பிக் காணப்பட்டது. இந்த ஏரியைச் சுற்றிக் குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளது.


பெங்களூரில் ஹூலிமாவூ பகுதியில் ஹுலிமாவூ ஏரி உள்ளது. சமீப நாட்களாகப் பெய்த மழையால் ஹுலிமாவ் ஏரி நிரம்பிக் காணப்பட்டது. இந்த ஏரியைச் சுற்றிக் குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளது.


இதனால், ஹுலிமாவூ பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநகராட்சி பணியாளர்களும் சேர்ந்து, அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



தாழ்வான பகுதிகள் முழுவதும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இதுவரை உயிர்ச் சேதம் பதிவாகவில்லை. வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்து காணப்படுவதால், அதிகாரிகள் அப்பகுதி மக்களை மீட்டு அரசுப் பள்ளி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.