தென்காசி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கையை 14 உயர்ந்ததாக கண்காணிப்பாளர் பேட்டி

தென்காசி மாவட்டத்தில்  கொரோனா எண்ணிக்கையை 14 உயர்ந்ததாக கண்காணிப்பாளர் பேட்டி


" alt="" aria-hidden="true" />


தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்த நன்னகரம் மற்றும் புளியங்குடி பகுதிகளில்; கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளர் கருணாகரன் ஆய்வு மேற்கொண்டார்.


தென்காசி மாவட்டத்தில் நன்னகரம் மற்றும் புளியங்குடி பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நபர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் குடியிருந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதனை ஆய்வு செய்ய தென்காசி மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனருமான  கருணாகரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா வைரஸ் கட்டுப்படுத்துதல் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளர் கருணாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளில் மிக வேகமாக செயல்பட்டு கொரோனா தொற்று மாவட்டத்தின் பிற பகுதிகளில் பரவாமல் தடுக்கும் பணியினை சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா இல்லாத மாவட்டம் எனும் நிலையை உருவாக்க வேண்டும்.


வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 2317 நபர்களை அவர்கள் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தது. அதில் 2034 நபர்களுக்கு 28 நாட்கள் முடிந்துவிட்டது. 283 நபர்கள் மட்டுமே தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்கள் வேலை புரிந்துவந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் தங்கவைக்கப்பட்டு அந்த நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராஜா, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமச்சந்திர பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.


Popular posts
பெரியாம்பட்டி ஊராட்சியில் காரியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று மாண்புமிகு உயர் கல்வி அமைச்சர் திரு KP அன்பழகன் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்...
Image
ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 354 ஆக உயர்வு
Image
வாணியம்பாடி பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் ஆய்வு
Image
என்.பி.ஆர். குறித்து அமைச்சர் உதயகுமார் விளக்கம் - முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது - வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம்
Image