இந்தியப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மந்தமாக இருப்பதை சர்வதேச ஆய்வு நிறுவனங்களின் மதிப்பீடுகள் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன.
பொருளாதார மந்தநிலை உண்மைதான் என மத்திய அரசே ஒப்புகொண்டுவிட்டது. வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு கூறியுள்ள
இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீத வளர்ச்சியையும், அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 4.5 சதவீத வளர்ச்சியையும் இந்தியா பதிவுசெய்திருந்தது. இது பல்வேறு தரப்புகளில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மோடி அரசைக் கடுமையாகச் சாடிவருகின்றனர்.