ஜப்பானில் உள்ள மீன் மார்கெட்டில் அரியவகை மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது அது ரூ13 கோடிக்கு ஏலத்திற்கு போயுள்ளது.
தலைநகர் டோக்கியோவில் உள்ள டொயோசு என்ற பகுதியில் மீன் சந்தை ஒன்று இயங்கி வருகிறது. அங்குக் கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ஏலத்திற்குக் கொண்டு வரப்படும். இப்படியாக இந்த புத்தாண்டையொட்டி ஒரு மெகா சைஸ் மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது
இந்த மீன் ஏலமிடப்பட்டது. இந்த மீன் சுமார் 276 கிலோ எடை கொண்ட அரிய வகை டுனா ரக மீன் என்பதால் இதை வாங்குவதற்குக் கடுமையான போட்டியிருந்தது.பலர் போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இதையடுத்து கியோஷி கிமுரா என்பவர் இந்த மீனை ஏலத்தில் எடுத்தார்