" alt="" aria-hidden="true" />
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் யுகாதி உற்சவம் கொண்டாடப்பட்டு வருகுறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யுகாதி உற்சவம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை நடக்கிறது. காலை 6 மணிக்கு உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் வில்வசேனர் ஆகிய சாமிகள் விமான பிரகாரம், கொடிமரம் வழியாக கொண்டு வரப்பட்டு தங்க வாசலில் வைக்கப்படுகின்றன.
மேலும் மூலவர் ஏழுமலையானுக்கு புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் ஆகம பண்டிதர்கள் மூலம் யுகாதி ஆஸ்தானம் செய்யப்படுகிறது.
யுகாதி உற்சவத்தை முன்னிட்டு 25-ந்தேதி நடைபெறும் சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் யுகாதியன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க திருமலை, திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.